Samantha: கணவரை பிரிந்தாலும் பாசம் மாறல: சமந்தாவுக்கு குவியும் பாராட்டு

Agent Teaser: நாக சைதன்யாவை பிரிந்த போதிலும் அவரின் தம்பி அகிலுடன் நட்பாகவே இருந்து வருகிறார் சமந்தா.

சமந்தாசமந்தாவும், அவரின் காதல் கணவரான நாக சைதன்யாவும் பிரிந்துவிட்டது அனைவருக்கும் தெரியும். நாக சைதன்யாவை பிரிந்தாலும் அவரின் தம்பியும், நடிகருமான அகில் அகினேனியுடனான நட்பை இன்னும் தொடர்கிறார் சமந்தா. இந்நிலையில் தான் அகில் தான் நடித்திருக்கும் ஏஜென்ட பட டீஸரை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்த சமந்தாவால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
டீஸர் View this post on Instagram A post shared by Akhil Akkineni (@akkineniakhil)
ஏஜென்ட்ஏஜென்ட் டீஸர் தொடர்பான அகிலின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை லைக் செய்துள்ளார் சமந்தா. கமெண்ட் பாக்ஸில் பீஸ்ட் மோடு ஆன் என்று கூறி தீ எமோஜியை தட்டிவிட்டுள்ளார். அதை பார்த்த அகில் ரசிகர்கள், சமந்தாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மற்றவர்களோ, அகில் மீதான பாசம் இன்னும் அப்படியே இருக்கிறது. இப்படி மனதார பாராட்ட நல்ல மனது வேண்டும். அது சமந்தாவுக்கு இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.
அகில்சமந்தா முன்னாள் அண்ணி ஆகிவிட்டாலும் அவர் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார் அகில். சமந்தா தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்ட போது முதல் ஆளாக தைரியம் சொன்னவர் அகில். மேலும் சமந்தாவை பாராட்டத் தவறாதவர். சமந்தா, அகில் இடையேயான இந்த நட்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ரசிகர்கள்முன்பெல்லாம் சமந்தா ஏதாவது போஸ்ட் போட்டால், தயவு செய்து நாக சைதன்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தார்கள். தற்போது அப்படி சொல்வது இல்லை. மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயுடன் தைரியமாக போராடி வரும் சமந்தாவுக்கு ரசிகர்கள் பக்கபலமாக இருந்து வருகிறார்கள். சிகிச்சை பெற்று வரும் நேரத்தில் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளத் துவங்கிவிட்டார் சமந்தா.
சிடாடல்தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடர் புகழ் ராஜ் மற்றும் டி.கே. இயக்கி வரும் சிடாடல் வெப்தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார் சமந்தா. ஷூட்டிங் தற்போது மும்பையில் நடந்து வருகிறது. ருஸோ சகோதரர்களின் சிடாடல் தொடரின் இந்திய வெர்ஷன் தான் இது. இந்நிலையில் சமந்தாவை வரவேற்று ருஸோ சகோதரர்கள் இன்ஸ்டா ஸ்டோரீஸில் போஸ்ட் போட்டதை பார்த்த பலரும் அவரை பாராட்டியுள்ளனர். சிடாடல் தொடரில் உளவாளியாக நடிக்கும் சமந்தா ஆக்ஷன் காட்சிகளிலும் மிரட்டப் போகிறார். இதற்காக ஹாலிவுட்டில் இருந்து ஸ்டண்ட் மாஸ்டரை இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார்கள். சிடாடல் தொடரில் பாலிவுட் நடிகர் வருண் தவானும் உளவாளியாக நடிக்கிறார்.

​Dhanush, Samantha: தனுஷுக்கு நடந்தது இப்போ சமந்தாவுக்கு நடக்குது: கொடுத்து வச்சவர் தான்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.