TP Gajendran: நேற்று வாணி ஜெயராம்..இன்று TP கஜேந்திரன்..அடுத்தடுத்த மரணங்கள்..அதிர்ச்சியில் திரையுலகம்..!

நேற்று பிரபல பாடகி வாணி ஜெயராம் மரணமடைந்தது தமிழ் திரையுலகினர் உட்பட ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அந்த துயரிலிருந்தே மீளாத ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு தற்போது மேலும் ஒரு சோகமான செய்தி வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரும், நடிகருமான TP கஜேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல இயக்குனரும் நடிகருமான விசுவிடம் உதவி இயக்குனராக தன் திரைப்பயணத்தை துவங்கினார் கஜேந்திரன்.

Run baby run: சீரியசான ரோலில் சிக்ஸர் அடித்தாரா ஆர்.ஜெ.பாலாஜி ?வெளியான ரன் பேபி ரன் விமர்சனம்..!

பல ஆண்டுகள் விசுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கஜேந்திரன் 1988 ஆம் ஆண்டு வெளியான வீடு மனைவி மக்கள் என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். அதன் பின் எங்க ஊரு காவல்காரன், பட்ஜெட் பத்பநாபன்,மிடில் கிளாஸ் மாதவன், சீனா தானா உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்தார்.

நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கையை பிரதிபலித்து படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் ஒரு இயக்குனராக இடம்பிடித்த கஜேந்திரன் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் 68 வயதான TP கஜேந்திரன் சமீபகாலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து இன்று தன் 68 ஆவது வயதில் காலமானார் கஜேந்திரன். இவரது மறைவிற்கு திரையுலகை சார்ந்த அனைவரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இயக்குனர் கே.விஸ்வநாத், பாடகி வாணிஜெயராம் ஆகியோர் மறைந்த நிலையில் தற்போது இயக்குனர் TP கஜேந்திரனின்மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.