Vani Jairam:வாணி ஜெயராம் திடீர் மரணம்: பணிப்பெண் சொன்னது இது தான்

வாணி ஜெயராமின் திடீர் மரணம் பற்றி அவர் வீட்டு பணிப்பெண் செய்தியாளர்களிடம் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

வாணி ஜெயராம்தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, போஜ்புரி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 10 ஆயிரம் பாடல்கள் பாடியவர் வாணி ஜெயராம். சென்னையில் தனியாக வசித்து வந்த வாணி ஜெயராம் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அண்மையில் தான் அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வாணி ஜெயராம் திடீர் என்று இறந்தது திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
1
பணிப்பெண்வாணி ஜெயராம் மரணம் குறித்து அவர் வீட்டில் வேலை பார்த்து வந்த மலர்கொடி செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த 10 ஆண்டுகளாக நான் வாணி அம்மா வீட்டில் வேலை செய்து வந்தேன். அனைத்து வேலையையும் நான் பார்த்தேன். அம்மா தனியாக வசித்து வந்தார். காலை 10.45 மணிக்கு அவரின் வீட்டிற்கு சென்று அழைப்பு மணியை 5 முறை அடித்தேன். அவர் வந்து கதவை திறக்கவில்லை. உடனே செல்போனில் அழைத்தேன், பதில் இல்லை என்றார்.

போலீஸ்என்னை அடுத்து என் கணவரும் வாணி அம்மாவை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் பதில் இல்லை. கதவை திறக்காததால் கீழ் வீட்டில் இருப்பவர்களுடன் கலந்து பேசி போலீசாருக்கு தகவல் கொடுத்தோம். அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்தபோது அம்மா இறந்து கிடந்தார் என மலர்கொடி மேலும் தெரிவித்தார்.
விருதுவாணி அம்மாவுக்கு எந்த நோயும் இல்லை. அவர் நலமாக இருந்து வந்தார். பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டதும் அவருக்கு பலர் போன் செய்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார் என்றார் மலர்கொடி. வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கவலைவாணி ஜெயராம் கால் தவறி விழுந்து இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. வாணி ஜெயராம் தனியாக வசித்து வந்தார் என்கிற தகவல் அறிந்த ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள். இந்த வயதில் பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லாமல் தனியாக வசித்து வந்ததே ஒரு கொடுமை. அப்படி இருந்தும் சிரித்த முகமாக வாழ்ந்திருக்கிறார் வாணி ஜெயராம் என்கிறார்கள் ரசிகர்கள்.

கணவர்Vignesh Shivan: இந்த சோகத்திலும் அஜித் சொன்னதை மட்டும் மறக்காத விக்னேஷ் சிவன்வாணியின் குரல் வளத்தை பார்த்து அவரை பாடல்கள் பாடுமாறு ஊக்குவித்ததே கணவர் ஜெயராம் தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயராம் இறந்துவிட்டார். இதையடுத்தே தனியாக வசித்து வந்தார் வாணி ஜெயராம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.