சென்னை: புற்றுநோய் ஆராய்ச்சி, சிகிச்சைமுறைகளை அறிந்துகொள்வதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் 5 நாள் பயணமாக இன்று ஜப்பானுக்கு புறப்பட்டு சென்றனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலக அளவில் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்பு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் பேர்புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முழுவதுமாக குணப்படுத்திவிடலாமென மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உலக அளவில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து […]