தஞ்சாவூர்: பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர் கணக்கெடுப்பில், வருவாய்துறை அதிகாரிகளின் அலட்சியமாக நடந்துகொண்டதாகவும், ஒருதலைப்பட்சமாக கணக்கெடுத்தாகவும் குற்றம் சாட்டி, தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரத்தில் இன்று காலை கையில் அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களில் பெய்த தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கி நெற்கதிர்கள் மற்றும் மானாவாரி பயிர்கள் சேதம் அடைந்துவிட்டது. இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் மாநில அரசுக்கு […]
