Jailer: அடேங்கப்பா.. மாஸ் நடிகரை களமிறக்கிய நெல்சன்: இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்கலயே.!

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் வேலைகள் படு தீவிரமாக நடந்து வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படத்தில் பல மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் இணைந்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாலிவுட் பிரபலம் ஒருவர் ஜெயிலரில் இணைந்துள்ளதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

‘ஜெயிலர்’ படத்தில் தினமும் ஒரு பிரபலம் இணைந்து வருவது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பான் இந்தியா படமாக ‘ஜெயிலர்’ உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. சிறுத்தை சிவாவின் ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ‘அண்ணாத்த’ படம் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றாலும் ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனால் ‘ஜெயிலர்’ படத்தை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். மேலும், கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற டார்க் காமெடி படங்கள் மூலம் ரசிகர்களை கவனம் ஈர்த்த நெல்சன் திலீப்குமாருடன் முதன்முறையாக ரஜினி இணைந்துள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

‘ஜெயிலர்’ படப்பிடிப்பு கடந்த வருடம் பூஜையுடன் துவங்கியது. ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிட்டது. ‘படையப்பா’ படத்திற்கு பிறகு ரஜினி, ரம்யா கிருஷ்ணன் காம்போ இந்தப்படத்தில் இணைந்துள்ளனர். மேலும் சமீபத்தில் தமன்னாவும் இந்தப்படத்தில் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு.

Ajith Kumar: ‘ஏகே 62’ படத்திற்காக தாறுமாறாய் தயாராகும் அஜித்: தீயாய் பரவும் போட்டோஸ்.!

இந்நிலையில் கடந்த சில தினங்களாக பல மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் ‘ஜெயிலர்’ படத்தில் இணைவது குறித்து அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் இணைந்தனர். தற்போது லேட்டஸ்ட்டாக பாலிவுட் பிரபலம் ஒருவர் ஜெயிலரில் இணைந்துள்ளது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Vetrimaaran: ‘ஆர் ஆர் ஆர்’ பட நாயகனை இயக்க போகும் வெற்றிமாறன்: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே.!

அதன்படி ஜாக்கி ஷெரஃப் இந்தப்படத்தில் இணைந்துள்ளது குறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் ஹிந்தியில் வெளியான உத்தர் தக்ஷின் படத்தில் ரஜினி, ஜாக்கி ஷெரஃப் இணைந்து நடித்திருந்தனர். நீண்ட இடைவேளைக்கு தற்போது இருவரும் ஜெயிலரில் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.