விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படத்திற்கு பிறகு லியோ திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். 14 வருடங்கள் கழித்து விஜய்யுடன் இப்படத்தின் மூலம் த்ரிஷா இணைந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அர்ஜுன், சஞ்சய் தத், மிஸ்கின், கௌதம் மேனன் ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகின்றது. மேலும் சமீபத்தில் லியோ படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இப்படம் அக்டோபர் மாதம் திரையில் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Dhanush: நான் அந்த சமயத்தில் மனஉளைச்சலில் இருந்தேன்..மேடையில் வெளிப்படையாக பேசிய தனுஷ்..!
இந்நிலையில் லியோ படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஸ்கின் நடித்து வருகின்றார். சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் இயக்குனரான மிஸ்கின் தொடர்ந்து அஞ்சாதே, பிசாசு, துப்பறிவாளன் என தரமான படங்களை இயக்கி வெற்றி கண்டார்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
தற்போது நடிகராகவும் களமிறங்கியுள்ள மிஸ்கின் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்து வருகின்றார். இதையடுத்து தற்போது விஜய்யுடன் இணைந்து லியோ படத்திலும் நடித்து வருகின்றார் மிஸ்கின். இந்நிலையில் லியோ படத்தில் நடித்து வரும் மிஷ்கினுக்கு தற்போது பல படவாய்ப்புகள் குவிந்து வருகின்றது.
எனவே நடிகனாக தனக்கு டிமாண்ட் இருப்பதை உணர்ந்த மிஸ்கின் தற்போது தன் சம்பளத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளாராம். அதன் படி நாள் ஒன்றிற்கு பத்து லட்சம் வரை சம்பளமாக கேட்கிறாராம் மிஸ்கின். மேலும் இயக்குவதை சில காலம் ஒதுக்கிவிட்டு முழு நேர நடிகராவதை பற்றியும் மிஸ்கின் யோசித்துவருவதாக தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.