Step-by-Step Guide | பான் – ஆதார் இணைப்பின் நிலையை சரிபார்ப்பது எப்படி?

சென்னை: பான் மற்றும் ஆதார் இணைப்பு கட்டாயம் என இந்திய அரசு கூறியிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி இதற்கான கெடு தேதி கடந்த மார்ச் 31, 2022 எனச் சொல்லப்பட்டது. இருந்தபோதும் இணைக்கத் தவறிய பயனர்கள் குறைந்தபட்ச அபராதத் தொகையுடன் வரும் மார்ச் 31 வரை இதை மேற்கொள்ளும் வகையில் அரசு நீட்டித்தது. இந்தச் சூழலில் பயனர்கள் தங்களது பான் – ஆதார் இணைப்பின் நிலையை எப்படி சரிபார்ப்பது என்பதை பார்ப்போம்.

பான் – ஆதார் இணைப்புக்கான அபராதத் தொகை ஏப்ரல் 1, 2022 முதல் ஜூன் 30, 2022 வரையில் ரூ.500 என இருந்தது. கடந்த ஜூலை 1, 2022 முதல் வரும் மார்ச் 31, 2023 வரையில் அபராதத் தொகை ரூ.1,000 என உள்ளது. கடந்த மார்ச் 31-க்கு முன் இணைக்க தவறிய பயனர்கள் இந்த அபராதத் தொகையை செலுத்தி பான் – ஆதாரை இணைக்க முடியும். இதன் இணைப்பின் நிலையை ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் சரி பார்க்கலாம்.

ஆன்லைன் மூலம் சரிபார்ப்பது எப்படி?

  • https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/link-aadhaar-status என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்
  • அதில் பான் மற்றும் ஆதார் எண் விவரங்களை உள்ளிட வேண்டும்
  • பின்னர் ‘View Link Aadhaar Status’ என்பதை க்ளிக் செய்வதன் மூலம் இணப்பு குறித்த விவரங்களை பயனர்கள் பெறலாம்

ஆப்லைனில் சரிபார்ப்பது எப்படி?

  • இதற்கு பயனர்கள் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டி உள்ளது
  • UIDPAN என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் கொடுக்க வேண்டும். தொடர்ந்து 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். மீண்டும் ஒரு ஸ்பேஸ் கொடுத்து 10 இலக்க பான் எண்ணை உள்ளிட வேண்டும்.
  • அதை 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்புவதன் மூலம் இணைப்பின் நிலையை சரிபார்க்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.