சிம்லா: இமாச்சல பிரதேசத்தின் லகால் ஸ்பிதி மாவட்டம், ஷின்குலா – தார்ச்சா இடையில் உள்ள சிகா என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் சாலையில் படிந்த பனியை அகற்றும் பணியில் 3 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பனிச்சரிவு ஏற்பட்டதில் 3 தொழிலாளர்களும் பனியில் புதையுண்டனர். இதில் இமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தை சேர்ந்த ராகேஷ், நேபாளத்தை சேர்ந்த ராம்புதா ஆகிய இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
நேபாளத்தை சேர்ந்த 27 வயது பஸ்ஸாங் செரிங் லாமா என்பவரை காணவில்லை. அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.