சென்னை: தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த கு.ப கிருஷ்ணன் தெரிவித்தார்.
ஓ.பன்னீர் செல்வம் மதுரை செல்வதற்கு முன்பு பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் திமுகவை எதிர்த்து நிற்கிறோம். இரட்டை இலை சின்னம் இபிஎஸ் தரப்புக்கு போனதால் எந்த பின்னடைவும் இல்லை. இடைத் தேர்தலுக்கு மட்டுமே உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கி உள்ளது. இரட்டை இலை சின்னத்தின் வெற்றிக்கு பிரச்சாரம் செய்வோம். ஓ. பன்னீர் செல்வத்தை பாராட்டிய செங்கோட்டையனுக்கு நன்றி என தெரிவித்தார்.
இதையடுத்து, ஓபிஎஸ்-ம் – இபிஎஸ்-ம் சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த கு.ப. கிருஷ்ணன், தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என கூறினார்.