புதுடில்லி : துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பெயரில், ‘வாட்ஸ் ஆப்’ சமூக வலைதளத்தில் போலி கணக்கு துவக்கி மோசடியில் ஈடுபட்ட, இத்தாலியில் வசிக்கும் இந்தியர் கைது செய்யப்பட்டார்; அவருக்கு உதவியவரும் கைது செய்யப்பட்டார்.
புதுடில்லி போலீசார் கூறியதாவது:
ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த ககந்தீப் சிங், ௨௨, ஐரோப்பிய நாடான இத்தாலியில் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். அங்கு, ஒரு நிறுவனத்தில் கூலி வேலை செய்து வரும் ககன்தீப் சிங், சமூக வலைதளங்களைப் பார்த்து, மோசடி செய்யும் முயற்சியில் இறங்க திட்டமிட்டார்.
பஞ்சாபில் வசிக்கும் அஸ்வினி குமார், ௨௯, என்பவரின் உதவியுடன், இவர் வாட்ஸ் ஆப் சமூக வலைதளத்தில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பெயரில் போலி கணக்கை துவக்கினார். இதன் வாயிலாக அரசு உயர் அதிகாரிகளுக்கு செய்திகள் அனுப்பி, சில வேலைகளை செய்யும்படி கூறியுள்ளார்.
சந்தேகத்தில் ஒரு அதிகாரி புதுடில்லி போலீசில் புகார் கொடுத்தார். விசாரணை நடத்தியபோது, இத்தாலியில் இருந்து ககன்தீப் சிங் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. அவருக்கு, பஞ்சாபைச் சேர்ந்த அஸ்வினி குமார் உதவியதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement