துருக்கி சிரியா நிலநடுக்க பலி எண்ணிக்கை 4300ஐ கடந்தது! உதவிக்கு விரைந்த இந்தியா

Turkey Earthquake: துருக்கியில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களினால், சிரியா மற்றும் துருக்கியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4300க்கும் அதிகமானது. உண்மையான எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியது. அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் பின்னதிர்வு வகையில் சேராது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோளில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. துருக்கிக்கு உதவ சர்வதேச சமூகம் முன்வந்துள்ளது. அதேபோல சிரியாவில் பலி எண்ணிக்கை 1400ஐத் தாண்டிவிட்டது.

நிலநடுக்க பாதிப்பால் தள்ளாடும் துருக்கியில், 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பதாக, அந்நாட்டு அதிபர் எர்டோகன் அறிவித்தார். துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்காக ஐக்கிய நாடுகள் பொது அவைக் கூட்டத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் படிக்க | ‘அந்த’ பெண் பிரபலம் அணிந்த உள்ளாடைகள்… ரூ. 87 லட்சம் வரை ஏலம் – உடனே தூக்கிய eBay

இந்த நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவில் பரவலான அழிவை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய கணக்கீடுகள் சுமார் 4300 பேர் இறந்ததாகக் கூறுகின்றன. இருப்பினும், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால், இந்த எண்ணிக்கை 10,000ஐ எட்டக்கூடும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தால் பாரிய பல மாடி கட்டிடங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் இடிந்து விழுந்தன.

“ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்… சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பிற மனிதாபிமானக் குழுக்கள்” குழுக்கள் “பேரழிவு தரும் பூகம்பத்தை எதிர்கொள்ளும் முயற்சிகளுக்கு” ஆதரவளிக்குமாறு சிரிய வெளியுறவு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  

இது இந்த நூற்றாண்டில் துருக்கியைத் தாக்கிய மிக மோசமான நிலநடுக்கம் என்றும், எல்லைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு சிரியாவையும் மோசமாக தாக்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 1999ல் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17,000க்கும் அதிகமான மக்களை பலிவாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | துருக்கியில் மிகப்பெரும் பூகம்பம்: 300-க்கும் மேல் பலி ; 600-க்கும் மேல் காயம்

பேரழிவால் உறைந்து போயிருக்கும் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு ஆதரவாக சமூகம் உதவிக் கரங்களை நீட்டியுள்ளன. இந்தியா, ரஷ்யாவில் இருந்து மீட்புப் பணியாளர்கள் இரு நாடுகளுக்கும் பறந்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பேரில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் மருத்துவக் குழுக்களுடன் இணைந்து உடனடியாக அனுப்பப்படும் என்று அதன் அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

இதனையடுத்து, இந்திய உதவிக் குழுக்கள் உதவிப் பணிகளுக்காக அனுப்பப்பட்டன. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான உதவிகளை மதிப்பிடுவதற்கும் உதவிகளை வழங்குவதற்கும் ஐக்கிய நாடுகள் சபையும் களத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | Pervez Musharraf: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.