பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு வில் உள்ள ஜவஹர்லால் நேரு சிறப்பு அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் 2-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இளம் விஞ்ஞானிகள் மாநாடு (எஸ்சிஓ ஒய்எஸ்சி) தொடக்க விழாவில் காணொலி முறையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
கரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இது போன்ற நோய்களை எதிர்க்க குறைந்த விலையில் சுகாதாரத் தீர்வுகளை விஞ்ஞானிகள் கண்ட றிய வேண்டும்.
மேலும், கரோனா பெருந் தொற்று போன்ற தொற்று நோய் களை எதிர்த்துப் போராட எஸ்சிஓ நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். உணவுப் பாதுகாப்பு என்பது எஸ்சிஓ நாடுகளின் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. விவசாய விளைபொருட்களின் தரம் மற்றும் அளவை அதிகரிப்பதில் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கும். இதனால் விவசாயிகள் வருவாய் அதிகரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் எஸ்சிஓ அமைப் பில் உள்ளன.