Aishwarya rajinikanth: பிரபல நடிகருடன் ஒர்கவுட் செய்யும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..வைரலாகும் வீடியோ..!

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தை பார்த்துவிட்டு இம்ப்ரஸ் ஆன ஐஸ்வர்யா தனுஷின் மீது காதல் கொண்டார். அதன் பின் இரண்டு வருடங்கள் காதலித்த இவர்கள் இரு வீட்டாரின் சம்மதத்துடன் 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இதையடுத்து இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் 18 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கடந்தாண்டு விவாகரத்தை அறிவித்தனர். சில கருத்து வேறுபாடுகளால் இவர்கள் இருவரும் பிரிவதாக பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

AK62: அஜித் போட்ட கண்டிஷன்..AK62 தாமதமாவதற்கு இதுதான் காரணமா ?

என்னதான் இவர்களை பற்றிய செய்திகள் நாளுக்கு நாள் இணையத்தில் வந்தாலும் இருவரும் தங்கள் வேலைகளில் பிசியாக இருக்கின்றனர். ஒருபக்கம் தனுஷ் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என தொடர் வெற்றிகளை கொடுத்து வருகின்றார்.

மறுபக்கம் ஐஸ்வர்யா ஆல்பம் பாடலை இயக்கிய பிறகு தற்போது ரஜினியை வைத்து லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகின்றார். லைக்கா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்க ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார்.

இந்நிலையில் விவாகரத்து ஆன பிறகு ஐஸ்வர்யா சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கின்றார். புத்தத்தங்கள் படிப்பது, உடற்பயிற்சி செய்வது என தன்னை பிசியாக வைத்துக்கொள்ளும் ஐஸ்வர்யா அவ்வப்போது சமுகப்பக்கங்களில் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா நடிகரும் இயக்குனருமான பிரபு தேவாவுடன் உடற்பயிற்சி செய்யும் வீடீயோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் பிரபு தேவாவை ரப்பர் மேன் என குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.