Bindu Madhavi: நிர்வாணமாக நடிக்க தயார்: பிக்பாஸ் நடிகை பகீர் பேட்டி.!

தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகை பிந்து மாதவி, கெளதம் மேனன் தயாரித்த ‘வெப்பம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கழுகு படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தார். அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் விமலின் தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பல ஹிட் படங்களில் இவரால் தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் காலூன்ற முடியவில்லை. இதனையடுத்து விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக எண்ட்ரி கொடுத்தார் பிந்து மாதவி. இறுதிப்போட்டி வரை முன்னேறி சென்ற அவரால் டைட்டிலை வெல்ல முடியவில்லை.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தமிழ் பிக்பாஸில் நழுவ விட்ட டைட்டிலை கடந்த ஆண்டு நடந்த தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வென்று அசத்தினார் பிந்து மாதவி. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகைகள் நிர்வாணமாக படங்களில் நடிப்பது குறித்து பிந்து மாதவியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

Varisu, Vijay: ஆட்ட நாயகன்.. வசூலில் சொல்லியடித்த தளபதி: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

இதற்கு பதிலளித்த அவர், பட வாய்ப்புக்காக யாரும் நிர்வாணமாக நடிப்பதில்லை. கதைக்கு தேவைப்பட்டால் அப்படி நடிப்பது தவறில்லை. அதுபோன்ற கதாபாத்திரம் எனக்கும் வந்தால் நானும் அப்படி நடிக்க ரெடி. ஆனால் கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே அவ்வாறு நடிப்பேன் என கண்டிஷனுடன் பதிலளித்துள்ளார் நடிகை பிந்து மாதவி.

Mahalakshmi: எங்களை நேசிக்கும் உறவுகளுக்காக.. கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த ரவீந்தர் – மகாலட்சுமி.!

மேலும், நயன்தாரா,த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் போல கதாநாயகிகளுக்கு முக்கியத்தும் கொடுக்கும் படங்களில் நடிக்கவே தனக்கும் ஆசை என்றும் தற்போது பெரும்பாலான படங்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக உள்ளன என்றும் தெரிவித்துள்ளார். தமிழில் பிந்து மாதவி, கைவசம் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய யாருக்கும் அஞ்சேல், சசிகுமாரின் பகைவனுக்கு அருள்வாய், மாயன் போன்ற படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.