Thunivu Collection: வசூலில் மாஸ் காட்டும் ஏகேவின் 'துணிவு': வாரிசை முந்தியதா.?

பொங்கல் திருநாளையொட்டி கடந்த மாதம் அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ படங்கள் ரிலீஸ் ஆனது. வசூலில் இரண்டு படங்களும் போட்டி போட்டு கொண்டு முன்னேறி வருகின்றன. இந்நிலையில் ‘துணிவு’ படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

எச்.வினோத், அஜித், போனி கபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகியுள்ள படம் ‘துணிவு’. இந்தப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியது. இவர்கள் கூட்டணியில் இதற்கு முன்பாக வெளியாக ‘வலிமை’ படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. இதையெல்லாம் தாண்டி மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியான ‘வாரிசு’ படம் பேமிலி ஆடியன்ஸை குறி வைத்து வெளியானது. ‘துணிவு’ படம் அதற்கு எதிராக அதிரடி ஆக்ஷன் ஜானருடன் வெளியானது. முதல் பாதி அஜித் ரசிகர்களுக்கான ட்ரீட்டாகவும், இரண்டாம் பாதி முழுங்க வங்கியில் நடக்கும் தவறுகளை தோலுரித்து காட்டும் விதமாக படமாக்கப்பட்டிருந்தது.

மேலும், அஜித் சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல், காதில் கடுக்கன் என நெகட்டிவ் ரோலில் மாஸ் காட்டியுள்ளதாகவும், ரொம்ப நாளுக்கு பிறகு முழு எனர்ஜியுடன் ஏகேவை துணிவில் பார்த்ததாக ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அத்துடன் வங்கிக் கொள்ளை பின்னணியில் அங்கு நடக்கும் மியூச்சுவல் பண்ட் மோசடி, கிரெடிக் கார்டு ஏமாற்று வேலைகளை அனைவருக்கும் புரியும்படியாகவும் படமாக்கியுள்ளதாக வினோத்தை அனைவரும் பாராட்டினர்.

Bindu Madhavi: நிர்வாணமாக நடிக்க தயார்: பிக்பாஸ் நடிகை பகீர் பேட்டி.!

இந்நிலையில் ‘துணிவு’ படம் வெளியாகி 27 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை உலகளவில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல் ‘வாரிசு’ படம் இதுவரையில் 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தகவல்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

அஜித் அடுத்ததாக நடிக்கவுள்ள ‘ஏகே 62’ படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த இந்தப்படத்தில் விக்கி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு பதிலாக தற்போது மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jailer: அடேங்கப்பா.. மாஸ் நடிகரை களமிறக்கிய நெல்சன்: இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்கலயே.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.