அடுத்தவர் வாழ்வை நாசமாக்க..சிம்புவுடனான உறவு பற்றி திருமண வீடியோவில் மனம்திறந்த ஹன்சிகா


பிரபல நடிகை ஹன்சிகா தனது திருமணம் குறித்த வீடியோவில் சிம்புவுடனான காதல் குறித்து பேசியுள்ளார்.


சிம்புவுடன் காதல்

‘வாலு’ படத்தில் நடித்தபோது சிம்பு – ஹன்சிகா இருவரும் காதலில் விழுந்தனர். ஆனால் சில மாதங்களிலேயே அவர்களின் காதல் முறிந்தது.

அதன் பின்னர் 2022ஆம் ஆண்டு வெளியான மஹா திரைப்படத்தில் மீண்டும் இருவரும் இணைந்து நடித்தனர்.

சிம்பு-ஹன்சிகா/Simbu-Hansika

சிம்பு-ஹன்சிகா/Simbu-Hansika

நண்பருடன் திருமணம்

ஹன்சிகா தனது தொழில்முறை நண்பரும், தோழியின் கணவருமான சோஹைல் கதூரியாவை நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனினும் இவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஹன்சிகாவின் திருமண நிகழ்வுகள் குறித்த வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Love Shaadi Drama என பெயரிடப்பட்டுள்ள இந்த வீடியோவுக்கான முன்னோட்டம் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

ஹன்சிகா-Hansika

மனம் திறந்த ஹன்சிகா

இதில் தனது முந்தைய காதல் குறித்து ஹன்சிகா மனம்திறந்துள்ளார். அதாவது நடிகர் சிம்புவுடனான காதல் குறித்து அவர் கூறினார்.

ஹன்சிகா கூறுகையில், ‘நான் ஏற்கனவே பொதுமக்களின் பார்வையில் ஒரு உறவில் இருந்துள்ளேன். நான் அதை மீண்டும் செய்ய விரும்பவில்லை.

ஆனால் அது மீண்டும் எனக்கு திடீரென நிகழ்ந்தது. மீண்டும் ஊர் அறிய ஒருவருடன் உறவில் செல்வதென்றால், அது நான் திருமணம் செய்து கொள்ளும் நபராக தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்’ என தெரிவித்துள்ளார்.

சிம்பு-ஹன்சிகா/Simbu-Hansika

மேலும் அந்த வீடியோவில், ‘திருமணத்தின்போது 19 நாட்கள் எரிமலை போல கொந்தளிப்பான மனநிலையில் தான் இருந்தேன். ஒரு காகிதம், ஒரு எழுதுகோல் இருந்தால் போதும் அடுத்தவர்களின் வாழ்க்கையை நாசமாக்க முடியுமென நம்புகிறார்கள்’ எனவும் ஆவேசமாக பேசியுள்ளார்.  

ஹன்சிகா-Hansika

ஹன்சிகா-Hansika



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.