ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் உள்பட 80 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தேர்தலில் போட்டியில்லை என்று கூறிய அமமுக வேட்பாளரின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு உள்ளது ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி இடைத்தேர்தல் […]
