சடலங்களின் குவியல்… நரகமான அந்த 24 மணி நேரம்: துருக்கி பேரிடரில் சிக்கிய பிரித்தானிய தம்பதி

துருக்கி நிலநடுக்கத்தின் போது சிக்கிக்கொண்டு உயிர் தப்பிய பிரித்தானிய தம்பதி ஒன்று, கண் முன்னே மொத்த நகரமும் உருக்குலைந்து போவதைக் கண்டு பீதியில் உறைந்ததாக தெரிவித்துள்ளனர்.

ரத்தம் ஒரு நொடி உறைந்து போனது

பிரித்தானியாவின் ஹல் பகுதியை சேர்ந்த லெமி துருக்கி பேரிடரின் போது இஸ்தான்புல் நகரில் பாதுகாப்பாக தங்கியிருந்துள்ளார்.
ஆனால் அவரது மனைவி விக்டோரியா மற்றும் குழந்தையானது நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு மிக அருகாமையில் உள்ள நகரில் தங்கியிருந்துள்ளனர்.

சடலங்களின் குவியல்... நரகமான அந்த 24 மணி நேரம்: துருக்கி பேரிடரில் சிக்கிய பிரித்தானிய தம்பதி | Turkey Earthquake Brit Couple Hours Of Hell

Credit: Go Fund Me

இந்த நிலையில் கைக்குழந்தையை கண்காணிக்கும் கருவி மூலமாக நிலநடுக்கத்தை காண நேர்ந்த லெமி, தமது ரத்தம் ஒரு நொடி உறைந்து போனதாக தெரிவித்துள்ளார்.

இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் 11,000 பேர்கள் வரையில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானதாக கூறப்படுகிறது.
ஆனால், இறப்பு எண்ணிக்கை 20,000 தொடும் என உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, செய்வதறியாது திகைத்துப் போன லெமி உடனடியாக பேரிடர் பகுதிக்கு விரைந்துள்ளார்.
சுமார் 15 நொடிகள் தான், மொத்தமும் தலைகீழாக மாறியது என கூறும் லெமி, கண் முன்னே வானுயர கட்டிடங்கள் தரைமட்டமாவது, உங்கள் ரத்தத்தை ஒரு நொடி உறைய வைக்கும் என்றார்.

சடலங்களின் குவியல்... நரகமான அந்த 24 மணி நேரம்: துருக்கி பேரிடரில் சிக்கிய பிரித்தானிய தம்பதி | Turkey Earthquake Brit Couple Hours Of Hell

@getty

வீதிகளில் குவிக்கப்பட்ட சடலங்கள்

தாம் இஸ்தான்புல் நகரில் இருந்ததால், சம்பவம் நடந்த போது தூக்கத்தில் இருந்ததாகவும், ஆனால் மனைவி விக்டோரியா அனுப்பிய காணொளி பதிவானது தம்மை பீதியில் உறைய வைத்தது என தெரிவித்துள்ளார் லெமி.

இதனையடுத்து கார் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, சுமார் 12 மணி நேர பயணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு சென்றதாக லெமி தெரிவித்துள்ளார்.
கட்டிடங்கள் தரை மட்டமானதுடன், வாகனங்கள் சிதைந்து, நகரமே மொத்தமாக உருக்குலைந்து, வீதிகளில் குவிக்கப்பட்ட சடலங்கள் என, நெஞ்சை உலுக்கும் காட்சிகள் அவை என குறிப்பிட்டுள்ளார் லெமி.

சடலங்களின் குவியல்... நரகமான அந்த 24 மணி நேரம்: துருக்கி பேரிடரில் சிக்கிய பிரித்தானிய தம்பதி | Turkey Earthquake Brit Couple Hours Of Hell

Credit: BPM Media

ஒருழியாக தமது குடும்பத்தை கண்டுபிடித்து, அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து, அங்கிருந்து அவர்களை பத்திரமாக வேறு பகுதிக்கு அழைத்து சென்றதாகவும் லெமி தெரிவித்துள்ளார்.
மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், பல நாட்கள் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சடலங்களின் குவியல்... நரகமான அந்த 24 மணி நேரம்: துருக்கி பேரிடரில் சிக்கிய பிரித்தானிய தம்பதி | Turkey Earthquake Brit Couple Hours Of Hell

@getty

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.