சிறுமி டானியா எப்படி இருக்கிறார்? நேரில் சென்ற முதல்வர்; கடைசியா சொன்ன 3 விஷயங்கள்!

அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தவர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த சிறுமி டானியா. ஆனால் நோய் பாதிப்புகள் சிறிதும் குணமாகவில்லை. பெற்றோர்களாலும் உயர் சிகிச்சைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. அதற்கான போதிய வசதிகள் இல்லை.

முகச் சிதைவு நோய்

இந்த சூழலில் தனது மகளின் முகச் சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய உதவிடுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு உடனடியாக மேற்கொண்டது. அமைச்சர் நாசர் கூடவே இருந்து அனைத்து சிகிச்சைகளும் பெற உதவினார். இந்நிலையில் சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமி டானியாவிற்கு முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இரண்டாவது முறை அறுவை சிகிச்சை

இந்நிலையில் 29.8.2022 அன்று சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிறுமி டானியாவை சந்தித்து முதல்வர்
மு.க.ஸ்டாலின்
நலம் விசாரித்தார். அதன்பிறகு சிறுமி படிப்படியான உடல்நலம் தேறி வந்தார். இந்நிலையில் இரண்டாவது முறையாக முகச் சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டானியாவின் இல்லத்திற்கு இன்று (பிப்ரவரி 8) நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.

நேரில் சென்ற ஸ்டாலின்

அப்போது உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் உடனிருந்தனர். உடல்நலம் எப்படி இருக்கிறது? வலி ஏதேனும் இருக்கிறதா? நன்றாக சாப்பிட முடிகிறதா? என்றெல்லாம் சிறுமியிடம் விசாரித்தார். இதையடுத்து சில அறிவுரைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அவை,

எலும்பு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்ண வேண்டும்மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்தொடர் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்

என்று கூறியுள்ளார். தங்கள் வீட்டிற்கு நேரில் வந்து நலம் விசாரித்து தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறுமி டானியாவின் தாய் சௌபாக்கியம் மிகுந்த நன்றி தெரிவித்துக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

முதல்வர் வழங்கிய அறிவுரை

குறிப்பாக சிறுமி டானியாவின் முகம் அறுவை சிகிச்சை செய்து கொண்டதை அடுத்து பெரிதும் மாறியுள்ளது. முகச் சீரமைப்பில் புதிதாக தசைகள் இடம்பெறுமாறு செய்து மாற்றம் செய்துள்ளனர். இதனால் வாய்ப் பகுதி நேராக வந்துவிட்டது. மேலும் காதுகளும் சீரான நிலைக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இது சிறுமி டானியாவிற்கு மிகுந்த நம்பிக்கையை அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் படிப்பில் நன்கு கவனம் செலுத்துமாறு பலரும் அறிவுரை கூறியுள்ளனர். டானியாவிற்கு தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக இருப்பதால் நல்ல குடிமகளாக வர வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.