துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய முன்னாள் பிரீமியர் லீக் நட்சத்திரம் Christian Atsu தொடர்பில் இன்னமும் உறுதியான தகவல் ஏதும் இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிருடன் மீட்கப்பட்ட Christian Atsu
நிலநடுக்கத்தில் அவரது குடியிருப்பு தரைமட்டமான நிலையில், அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது மருத்துவமனைகளில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரியவந்துள்ளது.
@AP
முன்னாள் நியூகேஸில் மற்றும் செல்சி வீரரான Christian Atsu நிலநடுக்கத்தில் சிதைந்த குடியிருப்பின் 9வது மாடியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது.
மட்டுமின்றி அவரது Hayatspor அணி நிர்வாகி ஒருவர் தெரிவிக்கையில், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார் என கூறியுள்ளார்.
ஆனால் இன்று அவரது தனிப்பட்ட முகவர் தெரிவிக்கையில், Christian Atsu தொடர்பில் இன்னமும் உறுதியான தகவல் ஏதும் இல்லை என்றார்.
அவர் கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர் மாயமானது புதிராக உள்ளது என கூறுகின்றனர்.
@reuters
11,200 பேரைக் கொன்றது
திங்கட்கிழமை அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவில் 11,200 பேரைக் கொன்றது.
மட்டுமின்றி, ஆரம்ப நிலநடுக்கத்திற்குப் பிறகு 24 மணி நேரத்தில் மேலும் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது.
சம்பவத்தன்று கிறிஸ்டியன் மற்றும் அவரது சக அணியினர் நண்பர் ஒருவரின் குடியிருப்பில் அதிகாலை 3.30 மணி வரை போக்கர் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அங்கிருந்து அரை மணி நேர பயணத்தில், சுமார் 4 மணிக்கு கிறிஸ்டியன் தமது குடியிருப்புக்கு திரும்பியுள்ளார்.
@getty
இதன் பின்னர் சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்படும் போது கிறிஸ்டியன் கண்டிப்பாக தூங்கியிருக்க வாய்ப்பில்லை எனவும், 11 மாடிகள் கொண்ட அந்த குடியிருப்பில் அவர் 9வது மாடியில் வசித்து வந்ததாகவும் கூறப்படுக்கிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பகல் சுமார் 6 மணிக்கு கிறிஸ்டியன் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், அவர் பாதுகாப்பாக உள்ளார் எனவும் தகவல் வெளியிடப்பட்டது.
ஆனால் அதன் பின்னர் அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என்றே கூறப்படுகிறது. அவர் தொடர்பில் மர்மம் நீடிப்பதாகவே கூறப்படுகிறது.