வீதியை பயன்படுத்த கட்டணம்! இலங்கையில் புதிய நடைமுறை


நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துபவர்களிடம் இருந்து கட்டணம் அறவிடப்படும் முறை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் மக்களிடம் இருந்து மாதாந்த கட்டணத்தை அறவிடுவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பணம் வசூலிக்க நடவடிக்கை

வீதியை பயன்படுத்த கட்டணம்! இலங்கையில் புதிய நடைமுறை | Road Usage Fee

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், 

தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளை பராமரிக்க முடியாத நிலையில் உள்ளதால், வீதி அபிவிருத்தி நிதியத்தை உருவாக்கி அதற்கான பணத்தை வசூலிக்க  ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

நிதியமைச்சின் முன்மொழிவின் அடிப்படையில் இந்தக் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றது. 

வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டதன் பிரகாரம் இந்த நிதியம் ஸ்தாபிக்கப்படும், அதற்கு அரசாங்கம் முதலில் 100 மில்லியன் ரூபாவை வரவு வைக்கும் என தெரிவித்துள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.