AK 62 Update: லியோ விஜய்க்கு போட்டியாக தனது அணியை களமிறக்கும் அஜித்…

AK 62 Update: நடிகர் அஜித் குமார், துணிவு படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து, தனது 62ஆவது படத்தில் நடிக்க ஆயுத்தமாகி வருகிறார். தற்போது அவர் போர்ச்சுகல் போன்ற ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரின் 62ஆவது படம் குறித்த தகவல்கள் இங்கு அனல் பறந்துகொண்டிருக்கிறது.

AK62 என்ற அழைக்கப்பட்ட அந்த படத்தை லைகா தயாரிப்பதாகவும், விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும் இருந்தது. தற்போது, சில காரணங்களுக்காக விக்னேஷ் சிவன் அந்த படத்தை இயக்கவில்லை எனத் தெரிகறது. அவரின் படத்தை அஜித் தரப்பு தள்ளிவைத்திருப்பதாகவும், வேறு கதையில் நடிக்க இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

அஜித் ஒப்புதல்?

இதனை உறுதிப்படுத்தும் வகையில், விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளங்களில் குறிப்பிட்டிருந்த AK62 என்ற வார்த்தையையும், ட்விட்டர் கவர் போட்டோவாக வைத்திருந்த அஜித் படத்தையும் சமீபத்தில் நீக்கினார். இதனால், அவர் அஜித்தின் 62ஆவது படத்தை இயக்கப்போவதில்லை என்ற பின் வேறு யார் அஜித்தை அடுத்த இயக்க இருக்கிறார்கள் என்ற கேள்வி வந்தது.

அட்லி, விஷ்ணுவர்தன் என பல இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்டாலும், மகிழ் திருமேனி AK62 படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. மகிழ் திருமேனி லண்டன் சென்று லைகா தயாரிப்பு நிறுவனத்திடம் கதையை ஒப்புதல் பெற்றதாகவும், அஜித்தும் அதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஏன் மகிழ் திருமேனி?

எனவே, இந்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தனது 67ஆவது படத்தின் பெயரை லியோ என கடந்த வாரம் அறிவித்த நிலையில், அஜித்தின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது. ஏனென்றால், வாரிசு – துணிவு படங்களை தொடர்ந்து, Thalapathy 67 – AK62 படங்களும் ஒன்றாக வெளியாகும் என கூறப்பட்டது. 

லியோ படத்தின் வெளியீடு ஆயுத பூஜையையொட்டி, இந்தாண்டு அக். 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. எனவே, அதே தேதியில் AK62 படத்தையும் வெளியிட அஜித் தரப்பு முடிவெடுத்துள்ளதாகவும், விரைவாக படத்தை திட்டமிட்டு முடிக்கும் வகையில் மகிழ் திருமேனி படப்பிடிப்புக்கு திட்டமிடுவார் என கூறப்படுகிறது.

தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ளார். சமூக சார்ந்தும், நிழல் உலகம் குறித்தும் ஆழ்ந்த பார்வையுள்ள மகிழ், லோகேஷ் கனகராஜின் கைதி, விக்ரம் பாணி படமாக பார்க்கப்படும் லியோவிற்கு சரியான போட்டியாக இருக்கும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ANI Era vs SANA Era

AK62 படத்தை லைகா தயாரித்து, மகிழ் திருமேனி இயக்குவதாக கூறப்படும் நிலையில், அதில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அஜித்துடன் முதல்முறையாக சந்தோஷ் நாராயணன் இணைய உள்ளதாகவும் தெரிகிறது. லியா படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதால், அடுத்து அனிருத் vs சந்தோஷ் நாராயணன் மோதலை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.