Leo, Trisha:லியோவில் இருந்து த்ரிஷா விலகிட்டார்னு பேச்சு கிளம்பியது ஏன்னு தெரியுமா?

Vijay: விஜய்யின் லியோ படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட பிரச்சனையால் த்ரிஷா கிளம்பிவிட்டார் என்கிற பேச்சு எப்படி கிளம்பியது தெரியுமோ?

லியோமாஸ்டரை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதையடுத்து முக்கிய காட்சிகளை படமாக்க காஷ்மீருக்கு சென்றிருக்கிறார்கள். ஹீரோயின் த்ரிஷாவும் காஷ்மீருக்கு போயிருக்கிறார். இந்த நேரத்தில் தான் த்ரிஷாவை பற்றி அந்த பேச்சு கிளம்பியது.
த்ரிஷாலியோ படப்பிடிப்பில் பிரச்சனை ஏற்பட்டு, இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறி காஷ்மீரில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டார் த்ரிஷா என பேசப்பட்டது. அதற்கு காரணமே அந்த விமான நிலைய புகைப்படம் தான். முன்பு எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை லேட்டஸ்ட் என தவறாக புரிந்து கொண்டதால் தான் இப்படி ஒரு பேச்சு கிளம்பி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
குழப்பம்
அம்மாLeo, Trisha: லியோவில் இருந்து த்ரிஷா விலகிட்டாரா?: உண்மையை சொன்ன அம்மா உமாஒரு பழைய புகைப்படத்தால் ஏற்பட்ட பிரச்சனை த்ரிஷாவின் அம்மா உமா விளக்கம் அளித்த பிறகு தீர்ந்துவிட்டது. த்ரிஷா சந்தோஷமாக லியோ படத்தில் நடித்து வருகிறார். அவரும், விஜய்யும் சேர்ந்து அனிருத் இசையில் சூப்பராக ஒரு டான்ஸ் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்குநர் என்பதால் அந்த டான்ஸ் நடப்பது சந்தேகம் தான்.

ரூ. 300 கோடிலியோ படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ரூ. 300 கோடிக்கு விற்றுவிட்டார்களாம். இது விஜய்யின் நடிப்பில் ஜனவரி 11ம் தேதி வெளியான வாரிசு படத்தின் வசூலுக்கு சமம் ஆகும். ரிலீஸுக்கு முன்பே ரூ. 300 கோடி என்றால், படம் வந்தால் வசூலில் புது சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.
அட்லிலியோ படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை. அதற்குள் தளபதி 68, தளபதி 69 படங்களின் இயக்குநர்கள் பற்றி பேசப்படுகிறது. தளபதி 68 படத்தை அட்லி இயக்கவிருக்கிறாராம். தெறி, மெர்சல், பிகிலை அடுத்து நான்காவது முறையாக விஜய்யை வைத்து படம் இயக்குகிறாராம். தளபதி 69 படத்தை வம்சி பைடிபல்லி இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

​Leo, Vijay: வாரிசு, லியோவை அப்புறமா கலாய்க்கலாம்: விஜய் பற்றி இந்த ‘ஹாட் மேட்டர்’ தெரியுமா?

வம்சி
வம்சி பைடிபல்லியின் பெயரை கேட்ட விஜய் ரசிகர்கள் சிலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சிலரோ, மறுபடியும் வம்சி வேண்டாம் அண்ணா. வாரிசு படத்தையே பட்டி டிங்கரிங் செய்து உங்களை நடிக்க வைத்துவிடுவார். அடுத்த படம் ஏதாவது தெலுங்கு சீரியலாகக்கூட இருக்கும், யார் கண்டது. அதனால் தயவு செய்து வம்சி இயக்கத்தில் மட்டும் மீண்டும் நடிக்க வேண்டாமே என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.