ஆம்புலன்ஸ் இல்லாமல் மனைவி உடலை சுமந்துசென்றவருக்கு உதவிய போலீஸ்| Odisha Man Carries Wife’s Body After Auto Driver Refuses To Take Them Home

விசாகபட்டினம்: ஒடிசா மாநிலம், கொரபுட் பகுதியைச் சேர்ந்தவர், எடி சமுலு, தனது மனைவி எடி குருவை சிகிச்சைக்காக, விசாகபட்டினம் அடுத்த சங்கிவாலசாவில் உள்ள, தனியார் மருத்துவமனையில், அனுமதித்து இருந்தார்.

உடல்நிலை மோசமடைந்ததால், டாக்டர்கள் எடி குருவை வீட்டுக்கு கொண்டு செல்ல, எடி சமுலுவிடம் கூறியுள்ளனர். மருத்துவமனையில் இருந்து, எடி குருவை ஆட்டோ வாயிலாக, அழைத்துச் சென்றபோது, விஜயநகரம் அருகே வழியிலேயே அவர், இறந்ததால் ஆட்டோ ஓட்டுனர், 2,000 ரூபாய் பணம் கேட்டுள்ளார்.

ஆட்டோவுக்கு பணம் கொடுக்க முடியாததால், மனைவியின் உடலை தோளில் சுமந்தபடி, எடி சமுலு ரோட்டில் நடந்து சென்றுள்ளார். இதை அறிந்த, விஜயநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி ராவ் மற்றும் எஸ்.ஐ., கிரண் குமார் நாயுடு ஆகியோர், ‘ஆம்புலன்ஸ்’க்கு 10,000 ரூபாய் ஏற்பாடு செய்து கொடுத்து, சமுலுவை அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்த, புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.