காஜியாபாத்,உத்தர பிரதேசத்தில் நீதிமன்ற வளாகத்திற்குள் சுற்றித் திரிந்த சிறுத்தை தாக்கியதில், நேற்று ஆறு பேர் காயமடைந்தனர்.
இது குறித்து, கவிநகர் உதவி போலீஸ் கமிஷனர் அபிஷேக் ஸ்ரீவத்சவ் கூறியதாவது:
காஜியாபாத் மாவட்டத்தின் கவிநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட நீதிமன்ற வளாகத்திற்குள், அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து நேற்று பிற்பகலில் சிறுத்தை ஒன்று வந்துள்ளது.
இது தாக்கியதில், ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இத்தகவல் பரவியதை அடுத்து, நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
அங்கு சென்ற போலீஸ் மற்றும் வனத்துறையினர், சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தை இன்னும் நீதிமன்ற வளாகத்தில் தான் உள்ளது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement