காவலர் தேர்வில் ‘விளையாட்டு வீரர்’ கோட்டாவில் போலிகள் நுழைய முயற்சி: சான்றிதழை துல்லியமாக ஆராய கோரிக்கை

சென்னை: தமிழக காவல் துறையில் 2-ம் நிலை காவலர் பணிக்கான உடல்திறன் தேர்வு தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இதில் ‘விளையாட்டு வீரர்’கோட்டாவில் சிலர் போலிசான்றிதழுடன் நுழைந்துள்ள தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் சான்றிதழ்களை துல்லியமாக ஆராய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 2-ம் நிலைகாவலர் பணிக்கான எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களில் ஒரு பணியிடத்துக்கு 5 பேர் என் றவிகிதத்தின் அடிப்படையில் உடல் திறன் தேர்வுக்கு மொத்தம் 18 ஆயிரத்து 672 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது.

உடல் திறன் தேர்வின்போது சான்றிதழ் சரிபார்த்தல், மார்பளவு சரிபார்த்தல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல், 100 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.

3 ஆயிரத்து 552 பணியிடங்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கான கோட்டாவும் உள்ளது.அதில், சிலர் விளையாட்டு வீரர்கள் போன்று போலி சான்றிதழ்களுடன் நுழைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சான்றிதழ்களை பணம் கொடுத்துகுறுக்கு வழியில் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

எனவே, தேர்வர்கள் அனைவரின் அசல் சான்றிதழ்களையும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள் துல்லியமாக ஆராய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.