கோடீஸ்வரர் பில் கேட்ஸ் டேட்டிங் செய்யும் விதவைப் பெண் யார்?


உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தற்போது 6-ஆம் இடத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், இப்போது புதிதாக ஒரு பெண்ணை டேட்டிங் செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புதிய உறவில் பில் கேட்ஸ்

2021, ஆகஸ்டில் தனது மனைவி மெலிண்டா கேட்ஸை விவாகரத்து செய்த பில் கேட்ஸ், இப்போது புதிய உறவில் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மைக்ரோசாப்ட் இணை-நிறுவனரும் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் (Bill Gates), மென்பொருள் நிறுவனமான Oracle Corporation-ன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியின் விதவை மனைவி பவுலா ஹர்டுடன் (Paula Hurd) டேட்டிங் செய்வதாக தகவல்கள் தெறிவிக்கின்றன.

கோடீஸ்வரர் பில் கேட்ஸ் டேட்டிங் செய்யும் விதவைப் பெண் யார்? | Bill Gates New Relationship With Paula HurdGetty

பவுலா ஹர்டின் கணவர் Mark Vincent Hurd 2019-ஆம் ஆண்டு ஆக்டொபர் 18-ஆம் திகதி உயிரிழந்தார்.

பில் கேட்ஸ் – பவுலா ஹர்ட் டேட்டிங்

இந்நிலையில், பில் கேட்ஸ் மீண்டும் தனது வாழவில் ஒரு காதலை கொண்டுள்ளதாகவும், அவர் பவுலா ஹர்டுடன் டேட்டிங் செய்வதாகவும் இரண்டு தனித்தனி செய்திகள் பிப்ரவரி 8 அன்று வெளியாயின.

“பில் கேட்ஸ் மற்றும் பவுலா ஹர்ட் இருவரும் டேட்டிங்கில் இருக்கிறார்கள் என்பது பரவலாக அறியப்படுகிறது, ஆனால் அவர் இன்னும் அவரது குழந்தைகளை சந்திக்கவில்லை” என்று பீப்பிள் பத்திரிகையில் வெளியானது. இதற்கிடையில், அவர்களது நண்பர் ஒருவர், அதனை கிட்டத்தட்ட உறுதி செய்யும் வகையில் இருவரும் “பிரிக்க முடியாதவர்கள்” என்று டெய்லி மெயில் தெரிவித்துள்ளார்.

கோடீஸ்வரர் பில் கேட்ஸ் டேட்டிங் செய்யும் விதவைப் பெண் யார்? | Bill Gates New Relationship With Paula HurdWikimedia

இருவரும் டென்னிஸ் ரசிகர்கள்

கடந்த மாதம் அவுஸ்திரேலிய ஓபனில் 67 வயதான பில் கேட்ஸ் மற்றும் 60 வயதான ஹர்ட் இருவரும் ஒன்றாக காணப்பட்டனர். அந்தப் புகைப்படம் வைரலானது.

அவர்கள் இருவரும் டென்னிஸ் ரசிகர்கள், மார்ச் 2022-ல் நடந்த இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் WTA அரையிறுதிப் போட்டியில் ஒன்றாக அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பில் கேட்ஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவி மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் விவாகரத்து செய்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களது உறவு பற்றிய செய்தி வந்துள்ளது.

கோடீஸ்வரர் பில் கேட்ஸ் டேட்டிங் செய்யும் விதவைப் பெண் யார்? | Bill Gates New Relationship With Paula HurdSplash

மெலிண்டா

பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா ஜோடி 27 வருட திருமணத்திற்குப் பிறகு மே 2021-ல் பிரிந்ததாக அறிவித்தனர். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர்களது விவாகரத்து முடிவு செய்யப்பட்டது. அவர்கள் இன்னும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை ஒன்றாக நடத்தி வருகின்றனர்.

மெலிண்டா கேட்ஸ், முன்னாள் தொலைக்காட்சி நிருபர் ஜான் டு ப்ரீயுடன் டேட்டிங் செய்வதாக முன்னர் செய்திகள் வெளியாகின.

கோடீஸ்வரர் பில் கேட்ஸ் டேட்டிங் செய்யும் விதவைப் பெண் யார்? | Bill Gates New Relationship With Paula HurdPhoto:DANIEL BERMAN/REDUX



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.