பிரெஞ்சு கோப்பை தொடரில் மார்செல்லே அணிக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் PSG அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.
எம்பாப்வேவுக்கு ஓய்வு
பிரான்சின் ஸ்டேட் வேலோட்ரோம் மைதானத்தில் நடந்த போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் மற்றும் மார்செல்லே அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் எம்பாப்பே களமிறங்கவில்லை. எனினும் மெஸ்சி, நெய்மர் வெற்றியை பெற்று தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் மார்செல்லே அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட அலெக்சிஸ் சான்சேஸ் அபாரமாக கோல் அடித்தார்.
@AP
செர்ஜியோ ராமோஸ் அடித்த கோல்
அதன் பின்னர் PSG அணி 45+2வது நிமிடத்தில் பதிலடி கொடுத்தது. அந்த அணியின் செர்ஜியோ ராமோஸ் கார்னர் கிக்கில் இருந்து வந்த பந்தை தனது தலையால் முட்டி அபாரமாக வலைக்குள் தள்ளினார்.
இதனால் முதல் பாதி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இரண்டாம் பாதியின் 57வது நிமிடத்தில் மார்செல்லே வீரர் ரஸ்லன் PSG-க்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அவர் மின்னல் வேகத்தில் அடித்த பந்து சீறிக்கொண்டு வலைக்குள் சென்று கோல் ஆனது.
அதிர்ச்சி தோல்வி
அதனைத் தொடர்ந்து கோல் அடிக்கும் PSG அணியின் அனைத்து முயற்சிகளையும் மார்செல்லே முறியடித்தது.
மெஸ்சி, நெய்மர் என இரண்டு நட்சத்திர வீரர்கள் இருந்தும் கோல் அடிக்க முடியாமல் 2-1 என்ற கோல் கணக்கில் PSG அதிர்ச்சி தோல்வியடைந்தது.
@psg.fr
@psg.fr