துருக்கி நிலநடுக்கத்திற்கு பின் நாடு இப்படி ஆகிவிட்டதா? பகீர் கிளப்பும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்

துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு அங்கு ஏற்பட்ட அழிவு பாதிப்பின் அளவை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

துருக்கி, சிரியா நிலநடுக்கம்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15000-ஐ தாண்டியுள்ளது.
பல உயரமான கட்டிடங்கள் இடிந்து விழுந்த மிக மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் துருக்கியின் தெற்கு நகரமான அந்தாக்யா மற்றும் கஹ்ராமன்மாராஸ் ஆகியவையும் அடங்கும்.

நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக திறந்தவெளி பகுதிகள் மற்றும் மைதானங்களில் நூற்றுக்கணக்கான அவசரகால முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதை செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தின.

துருக்கி நிலநடுக்கத்திற்கு பின் நாடு இப்படி ஆகிவிட்டதா? பகீர் கிளப்பும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் | Satellite Pics Massive Turkey Earthquake

23 மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம்

பொது மருத்துவமனைகளை உள்ளடக்கிய ஏழு மாகாணங்களில் கிட்டத்தட்ட 3,000 கட்டிடங்கள் இடிந்து விழும் என துருக்கி கணித்துள்ளது.
13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு வரலாற்று மசூதியும் பாதிக்கும் மேல் இடிந்து விழுந்தது.

நிலநடுக்கம் காரணமாக 23 மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் 77 தேசிய மற்றும் 13 சர்வதேச அவசர மருத்துவ குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

துருக்கி நிலநடுக்கத்திற்கு பின் நாடு இப்படி ஆகிவிட்டதா? பகீர் கிளப்பும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் | Satellite Pics Massive Turkey Earthquake

துருக்கி நிலநடுக்கத்திற்கு பின் நாடு இப்படி ஆகிவிட்டதா? பகீர் கிளப்பும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் | Satellite Pics Massive Turkey Earthquake

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.