சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் இன்று அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அங்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது. தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலும் ஒன்று. இந்த கோவிலில் கும்பாபிஷே கம் நடத்த திட்டமிட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இன்று அமைச்சர் சேகர்பாபு சங்கரநாராயண சுவாமி […]
