
கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி எடுத்துள்ள விவசாயி அவதாரம் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக தொடர்கிறார். மற்ற வீரர்களை போல் அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதில்லை.
ஆனால், எப்போதாவது வீடியோ, போட்டோ பதிவேற்றம் செய்தாலும் அது வெற லெவலில் ட்ரெண்ட் ஆவது உறுதி. அந்த வகையில் நேற்று தோனி அப்லோட் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

2021 ஜனவரி 8ஆம் தேதி தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதற்கு பிறகு நேற்று மாலை வீடியோ ஒன்றை தோனி வெளியிட்டார். அந்த வீடியோவில் ட்ராக்டர் மூலம் தோனி நிலத்தை உழுவது பதிவு செய்யப்பட்டிருந்தது. வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட சில நிமிடங்களில் லட்சங்களில் லைக்ஸ் குவிந்தது.
புதிதாக எதையாவது கற்றுக் கொள்வது என்பது நன்றாக இருக்கிறது. ஆனால் இந்த வேலையை முடிப்பதற்கு நீண்ட நேரம் ஆகிறது என்று அந்த வீடியோவுக்கு தோனி கிண்டலாக கேப்ஷன் கொடுத்துள்ளார். தோனியின் பதிவுக்கு லைக்ஸ்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.
newstm.in