பத்திரிக்கையாளர் படுகொலை; பாஜக அரசின் நெருக்கமான புள்ளிக்கு சிக்கல்.!

மகாராஷ்டிராவில் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் RRPCL எனப்படும் ரத்னகிரி ரிஃபைனரி & பெட்ரோகெமிக்கல் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளரின் முறைகேடுகள் மற்றும் அஜாக்கிரதை குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டவர் 48 வயதான பத்திரிக்கையாளர் சசிகாந்த் வாரிஷே.

அந்த பெட்ரொ கெமிக்கல் நிறுவனத்திற்கு எதிராக பொதுமக்களும், விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுவருவது குறிப்பிடதக்கது. இந்தநிலையில் கடந்த திங்கள் கிழமை பிரதமர் மோடி மற்றும் மாநில முதலமைச்சர், மாவட்ட ஆட்சியருடன் குற்றவாளியின் படம் உள்ளது என்று தலைப்பிட்டு தான் பணிபுரியும் மஹாநகரி டைம்ஸ் செய்தித்தாளில் கட்டுரை வெளியிட்டு உள்ளார் சசிகாந்த். பிரதமருடன் புகைப்படம் இருப்பதாக கூறப்படும் அந்த நபரின் பெயர் பந்தாரிநாத் அம்பேர்கர்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் ஆளும் பாஜக அரசு குற்றவாளிக்கு ஆதரவாக உள்ளது என பொதுமக்கள் கருதினர். இந்தநிலையில் பத்திரிகையாளர் சசிகாந்த் கடந்த செவ்வாய்கிழமை ராஜாபூர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நின்றபோது, அவர் மீது கார் ஏற்றி கொன்று இருக்கிறார் அம்பேர்கர். அவர் மீது மோதியதுடன் சில மீட்டர்கள் சசிகாந்தின் உடலை காரிலேயே இழுத்துச் சென்று கொடூரமாக கொலை செய்து இருக்கிறார் அவர். அப்பகுதி மக்கள் அருகில் செல்வதற்குள் அவர் அங்கிருந்து தப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கார் ஏற்றி கொலை செய்த அம்பேர்கர், அவரது நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொதுமக்களையும் விவசாயிகளையும் மிரட்டியதாக அவர் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து கொலையில் ஈடுபட்ட 42 வயதான அம்பர்கர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர் மரணம் குறித்து நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் என பல ஊடக நிறுவனங்கள் கோரியுள்ளன.

காங்கிரஸ் தான் பாஜகவின் பி டீம்; திரிபுராவில் மம்தா கர்ஜனை.!

உடனடியாக பத்திரிகையாளர் சசிகாந்தை கொன்றவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்து இருக்கிறார்கள். கடந்த திங்கள்கிழமை யாருக்கு எதிராக சசிகாந்த் செய்தி வெளியிட்டாரோ அந்த நபராலேயே அவர் கார் மோதி படுகொலை செய்யப்பட்டு இருப்பது மகாராஷ்டிரா மாநில பத்திரிகையாளர்களை கொதிப்படைய வைத்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.