மாரிதாஸ்க்கு என்னாச்சு? ஜகா வாங்கிய பின்னணி… வார் ரூம் ரெட்டிக்கு அவ்ளோ பவரா?

யூ-டியூபர் மாரிதாஸை வார் ரூம் ரெட்டி எனப்படும் அமர் பிரசாத் ரெட்டி சீண்டி பார்த்ததன் விளைவாக இரண்டு வீடியோக்கள் வெளியாகின. யூ-டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த போது மாரிதாஸ் பாஜகவில் சேர்ந்து பதவிக்கு வந்த பிறகு பேசட்டும். அப்புறம் பதில் சொல்கிறேன் எனப் பேசினார். இதை கையிலெடுத்து கொண்ட மாரிதாஸ் களத்தில் இறங்கினார்.

யார் இந்த மாரிதாஸ்?திமுக அரசை, திமுகவினரை மிகக் கடுமையாக விமர்சித்து பேசி வந்த மாரிதாஸ் சற்று ஓய்வெடுத்து கொண்டு ரெட்டி குறித்த பின்னணியை ஆராயத் தொடங்கினார். அவரை பற்றி அடுக்கடுக்காக பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தார். முதல் வீடியோவில் தான் வெறும் யூ-டியூபர் அல்ல என்றும், மத்திய பாஜக அரசின் திட்டங்கள் குறித்து தீவிரமாக எழுதி வந்த விவரங்களை காண்பித்தார்.
எங்க போனாலும் விட மாட்டேன்மேலும் அமர் பிரசாத் ரெட்டியின் வார் ரூம் அட்ராசிட்டி குறித்தும் பல்வேறு தகவல்களை வெளியிட்டார். தன்னை பற்றி பேசியதற்கு ரெட்டி உரிய விளக்கம் கொடுக்க வேண்டும். இல்லையெனில் பார்ட்-2 வீடியோ வெளிவரும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இனி இதுபோல பேச மாட்டேன் என்று கூறினால் விவகாரத்தை முடித்துக் கொள்வேன். இல்லையெனில் அமர் பிரசாத் ரெட்டியின் மொத்த பித்தலாட்டமும் அம்பலப்படுத்துவேன்.
​​
ரெட்டியின் பித்தலாட்டங்கள்பாஜக, மோடி என யார் பின்னால் போய் ஓடி ஒளிந்தாலும் இழுத்துப் போட்டு அடி நிச்சயம் என்று அதிரடி தெரிவித்திருந்தார். ஆனால் அதன்பிறகும் பிரச்சினை முடியவில்லை. பார்ட்-2 வீடியோ வெளியாகி மேலும் பரபரப்பை கூட்டியது. Sun Institute of Cyber Safety Limited என்ற பெயரில் நிறுவனம் தொடங்கியது முதல் மோடி ஆட்சியின் போது என்ன நடந்தது என்பது வரை புட்டு புட்டு வைத்திருந்தார்.
மாரிதாஸ் கடைசி ட்வீட்
வார் ரூம் அட்ராசிட்டீஸ்அமர் பிரசாத் என்ற நபர் அமர் பிரசாத் ரெட்டியாக மாறியதையும் விளக்கியிருந்தார். வார் ரூம் என்ற பெயரில் தன்னை எதிர்ப்பவர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் எப்படி பதிலடி கொடுத்து வருகிறார்கள்? சவுக்கு சங்கருக்கு எதிரான வழக்கில் சமரசம் செய்து கொண்டது என பல விஷயங்களை குறிப்பிட்டிருந்தார்.
விரோதம் விட்டு விலகுகிறேன்ஒட்டுமொத்தமாக சதுரங்க வேட்டை படப் பாணியில் ரெட்டியின் செயல்பாடுகள் இருந்ததாக சுட்டிக் காட்டி விட்டு வீடியோவின் அடுத்த பாகம் வெளிவரும் என்று மாரிதாஸ் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தனது ட்விட்டரில், ”நல்ல மனிதர்கள், பெரியவர்கள் பலர் கேட்டுக் கொண்டதால் விரோதம் விட்டு விலகுகிறேன். ஆளும் திமுக அரசுக்கு எதிரான என் பணியைத் தொடர உள்ளேன்.
திமுக தோல்விஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி. இனி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கவனம் செலுத்துவோம். திமுக கூட்டணி தோல்வியைத் தழுவ வேண்டியது அவசியம்” எனப் பதிவிட்டுள்ளார். இதனால் அமர் பிரசாத் ரெட்டிக்கு எதிராக தனது செயல்பாடுகளை மாரிதாஸ் நிறுத்திக் கொண்டது தெரியவருகிறது. இதன் பின்னணியில் நல்ல மனிதர்கள் பலர் கேட்டுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை பேசினாரா?மாரிதாஸ் தீவிர பாஜக ஆதரவாளர் என்பதால் அக்கட்சியை சேர்ந்த சிலர் வலியுறுத்தி இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. ஒருவேளை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூட பேசி விஷயத்தை சரிக் கட்டி இருக்கலாம். அதற்குள் யாருடைய மிரட்டலுக்கோ மாரிதாஸ் பணிந்துவிட்டார். செட்டில்மென்ட் ஆகிவிட்டது என்றெல்லாம் சமூக வலைதளங்களில் விமர்சிக்க தொடங்கி விட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.