இலங்கையில் முதன்முறையாக அறிமுகமான புதிய கார் – ஆரம்பித்து வைத்தார் ரணில்


 இலங்கையில் முதல் முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட வாகனம் ஒன்று சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட செய்யப்பட்ட Hyundai Grand i10 காரை இன்று கொழும்பு சிட்டி சென்டரில் அறிமுகம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றதுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த காரை ஓட்டிப்பார்த்துள்ளார்.

இலங்கையில் முதன்முறையாக அறிமுகமான புதிய கார் - ஆரம்பித்து வைத்தார் ரணில் | Sri Lanka S First Locally Assembled

புத்தம் புதிய வாகனமொன்றை இலங்கை சந்தைக்கு அறிமுகம் செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மிக விரைவில் மீண்டு வரும் என்ற நம்பிக்கை உறுதிப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Hyundai Grand i10 வாகனத்தை சந்தைக்கு அறிமுகம் செய்வதன் மூலம் எமது நாட்டின் மீதான வெளிநாடுகளின் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முதன்முறையாக அறிமுகமான புதிய கார் - ஆரம்பித்து வைத்தார் ரணில் | Sri Lanka S First Locally Assembled

இலங்கையின் அபான்ஸ் ஆட்டோ நிறுவனம் மற்றும் கொரியாவின் Hyundai மோட்டார் நிறுவனம் இணைந்து சீதுவாவில் உள்ள அதிநவீன தொழிற்சாலையில் இந்த காரின் ஒருங்கிணைப்பு செய்யப்படுகிறது.

வாகனங்களை ஒன்று சேர்ப்பது மற்றும் வாகன உதிரிபாகங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் துறையில் இந்த நிகழ்வு ஒரு பாரிய படியாகும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.