இலங்கை ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் முன்னிலை

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் 129 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

காலியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடும் இலங்கை ஏ அணி நேற்று (09) மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களை பெற்றது.

முதல் போட்டியில் இரட்டைச் சதம் பெற்ற நிஷான் மதுஷ்க 84 ஓட்டங்களுடனும் லசித் எம்புன்தெனிய ஒரு ஓட்டத்துடனும் களத்தில் உள்ளனர்.

234 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் நேற்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து லயன்ஸ் அணி 405 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதன்போது ஜெமி ஸ்மித் (126) சதம் பெற்றிருந்தார்.

இதன்போது இலங்கை சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன 4 விக்கெட்டுகளை எடுத்ததோடு விஷ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும் பிரவீன் ஜயவிக்ரம 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.