வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உலகிலேயே அதிவேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மூலதன செலவு அதிகரிக்கப்படுகிறது. அதிவேகமாக பொருளாதார வளரும் நாடுகளில் பட்டியலில் வரும் ஆண்டும் இந்தியா முதலிடத்தை தக்க வைக்கும்.

வளர்ச்சிக்கான தேவை, பொருளாதார ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் வடிவமைக்கபட்டுள்ளது. பொருளாதார நிலைத்தன்மையை மனதில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் வரி விதிக்கப்பட்டுள்ளது. வேகமான வளர்ச்சியில் இந்திய பொருளாதாரம் உள்ளது.
விவசாயிம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் பயன் பெறும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. உலகிலேயே அதிவேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா. வேலைவாய்ப்பை ஏற்படுதத் சிறு குறு தொழில்களின் வளர்ச்சிக்கு நடவடிகக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement