புதுடெல்லி,
பிரதமர் மோடி இன்று 2 மாநிலங்கள் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு முதலீட்டு மாநாடு, வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
காலை 10 மணியளவில் லக்னோவில் உச்சி மாநாட்டைத் தொடங்கி வைக்கும் மோடி, மதியம் 2:45 மணியளவில் மும்பையில் உள்ள டெர்மினஸில் இருந்து சோலாப்பூர் வந்தே பாரத் மற்றும் மும்பை-சாய்நகர் ஷீரடி வந்தே பாரத் ரெயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்
Related Tags :