வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், 5.9 மில்லியன் டன் ‛லித்தியம்’ உலோக பொருட்கள் இருப்பதை, தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் கண்டுப்பிடித்துள்ளது.

தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம், 1851ல் உருவாக்கப்பட்டது. இம்மையம் சார்பில், நாட்டில் உள்ள கனிம வளங்கள் குறித்து, 2018-2019ம் ஆண்டு துவங்கி, நேற்று வரை நடைபெற்ற ஆய்வில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின், ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால்-ஹைமானா மலையில், 5.9 மில்லியன் டன் லித்தியம் உலோக பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளதாக, நேற்று (பிப்.,9)ம் தேதி மத்திய சுங்கத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதனுடன், ஜம்மு-காஷ்மீர், ஆந்திரா, சட்டீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலங்களில், பெட்டாசியரம், மாலிப்டினம் தாதுவளங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர, நாடு முழுவதும் 7,897 மில்லியன் டன்கள் கொண்ட நிலக்கரி மற்றும் லிக்னைட் இருப்பது பற்றிய 17 அறிக்கைகளும், நிலக்கரி அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதைதொடர்ந்து வரும், 2023-2024ம் நிதியாண்டில், 966 கனிம ஆய்வு திட்டங்களை, புவியியல் ஆராய்ச்சி மையம் மேற்கொள்ள உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement