திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பயிர்சேத பாதிப்புகளை ஒன்றியக் குழு ஆய்வு செய்து வருகிறது. நேற்று முன்தினம் நாகையில் தொடங்கிய ஆய்வு 3 வது நாளாக திருச்சியில் நடைபெற்று வருகிறது. முதலில் பெரிய சூரியூரில் ஆய்வு செய்துவரும் நிலையில் குண்டூர், மணப்பாறை பகுதிகளிலும் ஆய்வு செய்து வருகின்றனர்.