துருக்கி நிலநடுக்கத்தின் அவலத்தை உணர்த்தும் புகைப்படம்; தந்தை பாசத்தால் சோக அலை.!

துருக்கி – சிரியா எல்லையில் கடந்த திங்கள் கிழமை அதிகாலை 4:17 மணியளவில், துருக்கியின் காசியன்டெப் நகரில் 7.8 ரிக்டர் அளவில், 17.9 கி.மீ. ஆழத்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பான யு.எஸ். ஜியாலஜிகல் சர்வே தெரிவித்தது. துருக்கியில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிக மோசமான நிலநடுக்கம் இது என நிலநடுக்க ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வு சுமார் 2 நிமிடங்கள் நீடித்ததாக, அதில் உயிர் பிழைத்தவர்கள் கூறினர்.

துருக்கியின் காரமன்மராஸ் மாகாணத்தில் உள்ள எல்பிஸ்டான் மாவட்டத்தில் திங்கள்கிழமை 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் பதிவானது. மேலும் ஒரேநாளில் மூன்றாவது முறையாக 6 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி அடுத்தடுத்து பேரழிவுகள் ஏற்பட்டன.

இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டு உள்ளது. அதிகாலை என்பதால் வீடுகளில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டடங்கள் இடிந்து அதன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக் கொண்டனர். நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கஹ்ராமன்மராஸ், அதியமான், மாலதியா, தியார்பகிர் உள்ளிட்ட நகரங்கள் முற்றிலும் சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்துவிழுந்துள்ளன. கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

துருக்கி மற்றும் சிரியாவில் மீட்புப் படையினர் தொடர் நில அதிர்வுகளுக்கு மத்தியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள், பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்களை பன்னாட்டு குழுவினர் உதவியுடன் மீட்டு வருகின்றனர்.

இந்தியாவின் சார்பாக துருக்கியில் பாதிக்கப்பட்டோரை மீட்க மருத்துவ உதவி மற்றும் நிவாரணப் பொருட்களுடன் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்பபட்டுள்ளது. சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்ப் படைகள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் 100 பணியாளர்களைக் கொண்ட தேசிய மீட்பு படையின் இரண்டு குழுக்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பபட்டுள்ளன.

மேலும் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுடன் மருத்துவக் குழுக்கள் அத்தியாவசிய மருந்துகளுடன் தயார் நிலையில் உள்ளன. அத்தியவசிய மருந்துகளை துருக்கி அரசாங்கம் மற்றும் இந்திய தூதரகம் வழியாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. நிலநடுக்கத்தால் 21 ஆயிரத்திற்கும் மேலானோர் பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது,

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்த தனது 15 மகளின் கையை விடாமல் பிடித்துக் கொண்டு இருக்கும் தந்தையின் புகைப்படம் வைரலாகிவருகிறது. கட்டிட இடிபாடுகளில் புதையுண்டு கிடக்கும் மகளின் கையை தந்தை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பது சோக அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் – அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன் முறையாக எய்ட்ஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது

மெசுட் ஹான்சர் உறையும் குளிரில் ஒரு காலத்தில் தனது வீடாக இருந்த உடைந்த செங்கற்கள் குவியலின் மீது தனியாக அமர்ந்து, உலகை மறந்து துக்கத்தில் மூழ்கியுள்ளார். அவரது மகள் இர்மாக் இறந்துவிட்டார். ஆனால், திங்கட்கிழமை அதிகாலையில் முதல் நடுக்கம் ஏற்பட்டபோது, பெண் தூங்கிக் கொண்டிருந்த மெத்தையிலிருந்து வெளியே எட்டிப்பார்த்த விரல்களைப் பார்த்து, அவளைப் போகவிட மறுத்துவிட்டார்.

துருக்கியை வாட்டி வதைக்கும் இயற்கை: இரண்டாவது நாளாக மீண்டும் நிலநடுக்கம்!

புகைப்படம் எடுக்கும்போது, நான் மிகவும் வருத்தப்பட்டேன். ‘என்ன பெரிய வலி’ என்று எனக்குள் மீண்டும் சொல்லிக் கொண்டேன். என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை என புகைப்படம் எடுத்த அல்டான் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.