தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான கொள்கை கட்டமைப்பை ஜனாதிபதி முன்வைத்துள்ளார் என்று துறைமுகங்கள், கப்றுரை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு பிரேரணையின் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…
பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான கொள்கை கட்டமைப்பையும் ஜனாதிபதி முன்வைத்துள்ளார். தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான கொள்கை கட்டமைப்பை ஜனாதிபதி முன்வைத்தார்.
மக்கள் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும். இந்த நாட்டில் அரசியல் பயங்கரவாதத்தை அனுமதிக்கக்கூடாது. ஜனநாயக அரசியல் கட்டமைப்பை உடைக்க முடியாது. ஜனநாயக அரசியல் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். அரசியல் பயங்கரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.