நாக்பூர்: நாக்பூரில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்தது. ஆட்ட நேர முடிவில் ஆஸி அணியை விட இந்திய அணி 144 ரன்கள் எடுத்து முன்னிலையில் உள்ளது. இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா 66 ரன்னுடனும், அக்ஷர் படேல் 52 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.
