சென்னை: முதலமைச்சரின் களஆய்வுக்கு பிறகு சில மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டு புதிய கலெக்டர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர்களுக்கு தமிழ்நாடு தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், புதிதாக பொறுப்பேற்றிருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய ஆட்சிப் பணியில் பலரும் இணைவதற்கு ஆட்சித் தலைவர் பணியே அச்சாரமாக அமைந்திருக்கிறது. அதுவே பலரையும் இப்பணிக்கு ஈர்க்கும் உந்து சக்தியாகவும் விளங்குகிறது. இப்பணியில் நீங்கள் ஆற்றும் […]
