வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவபிரசாத் என்பவர் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் தெரிவித்திருந்த நிலையில் குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால் வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.இதனால் இடைத்தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவை அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் திரும்ப பெற்றார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் இன்று மதியம் நிறைவடைந்தது. 83 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை 8 பேர் மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த், சுயேச்சைகள் 7 பேர் உள்பட 8 பேர் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர்.