புதுடில்லி : கடந்த 11 ஆண்டுகளில், 16.63 லட்சம் பேர், இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பார்லி.,யின் ராஜ்ய சபாவில் நேற்று இந்திய குடியுரிமையை துறந்தவர்கள் குறித்து விவாதிக்கப்பட்து. அப்போது பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த 11 ஆண்டுகளில் 16.63 லட்சம் பேர் இந்தியக் குடியுரிமையை துறந்துள்ளதாகக் கூறினார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது:
நம் நாட்டினர், 2011ல் 1.23 லட்சம் பேரும், 2012ல் 1.21 லட்சம் பேரும் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். கடந்த, 2013 மற்றும் 2015ம் ஆண்டுகளில் தலா 1.31 லட்சம் பேரும், 2014ல் 1.29 லட்சம் பேரும் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர். கடந்த, 2016ல் 1.42 லட்சம் பேரும், 2017ல் 1.33 லட்சம் பேரும் குடியுரிமையை துறந்துள்ளனர். 2018ல் 1.34 லட்சம் பேரும், 2019ல் 1.44 லட்சம் பேரும், 2020ல் குறைந்த அளவாக 85 ஆயிரத்து 256 பேரும் குடியுரிமையை துறந்துள்ளனர்.
கடந்த 2021ல் 1.63 லட்சம் பேர் குடியுரிமையை துறந்த நிலையில், 2022ல், இந்த எண்ணிக்கை 2.26 லட்சமாக அதிகரித்துள்ளது.
இது அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். கடந்த, 2011 துவங்கி, 11 ஆண்டுகளில் இதுவரை 16.63 லட்சம் பேர் குடியுரிமையை துறந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement