விருதுநகர் மாவட்டத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தீயணைப்புத் துறை ஊழியர் ராமராஜ்(65). இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை அடுத்து இந்த சம்பவம் குறித்து சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் ராமராஜன் கைது செய்தனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ராம்ராஜ் க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூபாய் மூன்று லட்சம் வழங்க உத்தரவிட்டார்.