நாக்பூர் டெஸ்டில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
முதல் டெஸ்ட்
இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்தது.
அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 177 ஓட்டங்களும், இந்தியா 400 ஓட்டங்களும் எடுத்தன.
அதனைத் தொடர்ந்து 223 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் அவுஸ்திரேலியா தனது 2வது இன்னிங்க்சை தொடங்கியது.
அதிர்ச்சி கொடுத்த அஸ்வின்
இரண்டாவது ஓவரிலேயே அவுஸ்திரேலியாவுக்கு அஸ்வின் அதிர்ச்சி அளித்தார்.
அவரது பந்துவீச்சில் கவாஜா 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து லபுசாக்னே 17 ஓட்டங்களில் ஜடேஜா பந்துவீச்சில் அவுட் ஆன நிலையில், அடுத்து வார்னரும் அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரென்ஷா, ஹேண்ட்ஸ்கோம்ப், கேரி ஆகியோரும் அஸ்வின் பந்துவீச்சில் நடையைக் கட்டினர்.
That moment when you get the DRS right! 🙌🏻
There’s no stopping #TeamIndia today!
Follow the match ▶️ https://t.co/SwTGoyHfZx#TeamIndia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/ixZz5hU5qq
— BCCI (@BCCI) February 11, 2023
இமாலய வெற்றி
இறுதியாக லயன் மற்றும் போலண்ட் விக்கெட்டுகளை ஷமி கைப்பற்ற, அவுஸ்திரேலிய அணி 91 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்ஸில் மூன்று, இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து என அஸ்வின் மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.