ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவரும் நடிகர் அஜித் குமார் ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள லாக்கர்பை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 1988 ம் ஆண்டு 270 பேரை பலி வாங்கிய போயிங் விமான வெடிவிபத்து உலகையே உலுக்கியது. ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் டெட்ராய்ட் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த பான் ஆம் 103 விமானத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் இந்த விமானத்தில் பயணம் செய்த 243 பயணிகள் மற்றும் 16 ஊழியர்கள் பலியாகினர். […]
