கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ… என்னென்ன செய்கிறார் பாருங்கள்!

Keerthy Suresh Animal Flow Video: முன்பெல்லாம் நாயகர்கள் மட்டுமே உடற்பயிற்சிக்கூடத்திற்கு சென்று படத்தில் சிக்ஸ் பேக் காட்ட வேண்டும் என்பது டிரெண்டாக இருந்தது. ஆனால், அதெல்லாம் இப்போது பழமையாகிவிட்டது. நாயகிகளும் தற்போது உடலை பராமரிப்பதிலும், தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடுவதையும் பொதுவெளியில் அறிவித்து வருகின்றனர்.

சமந்தா உள்ளிட்டோர் தான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இவர்களின் செயல்பாடுகள் அமைந்திருப்பதாக பலரும் கருதுகின்றனர். 

இந்திய சமூகத்தில் உடல் மீதான கவனிப்பு, குறிப்பாக பெண்களிடம் மிகவும் குறைந்து காணப்படும் நிலையில், இதுபோன்று பிறருக்கு உதாரணமாக விளங்கும் வகையில், நடிகைகள் உடற்பயிற்சியில் ஈடுபடுவது சிறப்பான செயல்பாடுகளாக கருதப்படுகிறது. 

உடற்பயிற்சி மூலம் படங்களில் மட்டுமில்லாமல், அவர்களது தனிப்பட்ட வாழ்விலும் அவர்களுக்கு உதவக்கூடிய ஒன்றாக உடற்பயிற்சி விளங்குவதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கீர்த்தி சுரேஷ், வித்தியாசமான முறையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதாவது, Animal Flow என்றழைக்கப்படும் அந்த  உடற்பயிற்சி, யோகாசனம், தியானம், பிரேக் டான்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது என கூறப்படுகிறது. Animal Flow என்பது தரை அடிப்படையிலான, உடல் எடை இயக்கத்தை வைத்து செய்யப்படும் உடற்பயிற்சியாகும். வேகம், உடல் சக்தி, நெகிழ்வுத்தன்மை, உடல் இயக்கம், நிலைத்தன்மை உள்ளிட்ட பல திறன்களை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. 
உங்கள் தேவைகளுக்கு ஏற்ப உங்கள் வழக்கத்தை நீங்கள் வடிவமைக்க முடியும். இது மைக் ஃபிட்ச் என்பவரால் முதன்முதலில் வடிவமைக்கப்பட்டது என கூறப்படுகிறது. இது கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மிகவும் பிரபலமடைந்த ஒன்றாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், தான் முதன்முறையாக Animal Flow உடற்பயிற்சியை நிறைவுசெய்துள்ளதாக கீர்த்தி சுரேஷ் அந்த இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், இயற்கையுடன் ஒன்றிணைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவுக்கு நடிகை பார்வதி உள்ளிட்டோர் வீடியோவில் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | மாளிகப்புரம் ஓடிடி ரிலீஸ்: பிப்ரவரி 15 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது
 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.